Wednesday 21 May 2014

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

மார்ச் 26 ம் தேதி முதல், ஏப்ரல் 9ம் தேதி வரை நடைப்பெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.  பள்ளிகளின் மூலமாக 10.38 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதினர்.

தேர்வு முடிவுகளை பள்ளிகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் தெரிந்துகொள்ள முடியும்.

வழக்கமான நேரத்துக்குப் பதிலாக, இந்த ஆண்டு 45 நிமிஷங்கள் முன்கூட்டியே (காலை 9.15 மணிக்கு) தேர்வுகள் தொடங்கின.

 எஸ்.எம்.எஸ்.: 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு.

10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை கீழ் கண்ட இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in 
www.dge2.tn.nic.in 
www.dge3.tn.nic.in


தேர்வு முடிவுகளைப் பெற பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 53576 என்ற எண்ணுக்கு SSLC என டைப் செய்து தங்களது பதிவு எண்ணை மாணவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD என டைப் செய்து மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணையும், பிறந்த தேதியையும் எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

10th-results-2014தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.

மே 26 முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு மே 26 முதல் 31 வரை பள்ளிகள் மூலமாக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்களில் விண்ணப்பிக்கலாம்.

மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் மறுகூட்டல் கட்டணம் ரூ.305. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதும் மையங்களிலும் செலுத்த வேண்டும். 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும்.

இந்தத் தேர்வுக்கு மே 26 முதல் 30 வரை பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125. பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

0 comments

Post a Comment